மகாராஷ்டிராவில் ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரையில் தேசிய கீதத்திற்கு பதிலாக வேறு பாடல் ஒலித்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியை, 2024 தேர்தலில் வெற்றி பெறச் செய்யும் விதமாகவும், அக்கட்சியை வலுப்படுத்துவதற்காகவும், ஒற்றுமை யாத்திரை எனும் பெயரில் பாத யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரையானது, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக தற்போது மகாராஷ்டிராவில் யாத்திரையை தொடர்ந்து வருகிறார். இந்த யாத்திரையின்போது, அந்தந்த பகுதி மக்களுடன் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இந்த நிலையில், வாசிம் மாவட்டத்தில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நிகழ்ச்சியில், தேசிய கீதத்திற்கு பதிலாக வேறு ஒரு பாடல் இசைக்கப்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
இதுதொடர்பான வீடியோவை வெளியிட்டு ராகுலையும், ஒற்றுமை யாத்திரையையும் கடுமையாக பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வீடியோவை, தேசிய கீதம் இசைக்கப்படும் என்று ராகுல் காந்தி அறிவிக்க, அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
ஆனால் தேசிய கீதத்திற்கு பதிலாக வேறு பாடல் வேறு மொழியில் ஒலிபரப்பப்பட்டது. இதனால், குழப்பமடைந்த ராகுல் காந்தி, அருகில் நின்றிருந்த காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சைகை மூலம் தவறை சுட்டிக் காட்டுகிறார். பின்னர், உடனடியாக தவறு சரி செய்யப்பட்டு, முறையான தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி குறித்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜக தேசிய செயலாளர் சுனில் தியோதர், இந்தியாவை ஒன்றிணைப்பவர்களின் தேசிய கீதமா இது? என கிண்டலடித்துள்ளார். அதே வீடியோவை பகிர்ந்துள்ள தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, “ராகுல் காந்தி, என்ன இது?” என்று கூறி உள்ளார்.
பாஜக, தமிழுக்கு எதிராக செயல்படுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்:…
லைகா நிறுவனம் தமிழ் சினிமாவை கத்தி படம் மூலம் தயாரிக்க ஆரம்பித்தது. அந்த படம் லைகா நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை…
பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி:…
பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து…
சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த…
This website uses cookies.