ஆமாம்.. COVISHIELD மருந்து பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட இங்கிலாந்து நிறுவனம்!
Author: Udayachandran RadhaKrishnan30 April 2024, 10:51 am
ஆமாம்.. COVISHIELD மருந்து பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட இங்கிலாந்து நிறுவனம்!
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உலக நாடுகள் ஸ்தம்பித்தன.
இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கண்டுபிடித்தன. இதில் இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின.
இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. இதற்கிடையே அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதேபோல் 51 வழக்குகள் நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்டன. இவ்வழக்குகள் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் கோர்ட்டில் அளித்த ஆவணத்தில், கோவிட் தடுப்பூசி ஒரு அரிய பக்க விளைவை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக தி டெலிகிராப் ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்.. 3 நாள் ஜாக்கிரதையா இருங்க : மஞ்சள் Alert கொடுத்த வானிலை மையம்!
கொரோனா தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில், ரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு (டி.டி.எஸ்.) வழிவகுக்கும் நிலையை ஏற்படுத்தும். ஆனால் இது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நடக்கும். எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.