பாக்கியலட்சுமி கோவிலுக்கு வந்த யோகி ஆதித்யநாத் : செயற்குழு கூட்டத்தின் நடுவே முதலமைச்சரின் திடீர் தரிசனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2022, 4:44 pm

தெலுங்கானா: சார்மினாரில் அமைந்துள்ள பாக்கியலட்சுமி கோவிலில் வழிபாடு நடத்தினார் யோகி ஆதித்யநாத்.

ஹைதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று துவங்கி நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, உத்திர பிரதேஷ் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உள்ளிட்ட அக்கட்சியின் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் ஹைதராபாத் வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஐதராபாத்தின் அடையாளமாக திகழும் சார்மினார் கட்டிடத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள பாக்கியலட்சுமி கோவிலுக்கு இன்று காலை சென்ற உத்தர பிரதேஷ் முதல்வர் யோகி ஆதித்யநாத் பாக்கியலட்சுமியை வழிபட்டார்.

யோகி ஆதித்யநாத் வருகை முன்னிட்டு சார்மினார் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாக்கியலட்சுமி கோவில் ஹைதராபாத்தில் இருப்பதால் ஹைதராபாத்திற்கு முன்னர் பாக்கிய நகரம் என்று பெயர் இருந்ததும், இடைப்பட்ட காலத்தில் பாக்கிய நகரத்தின் பெயர் ஹைதராபாத் ஆக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!