நீங்க எனக்கு அட்வைஸ் பண்ண தேவையில்லை : நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறிய ஜெயா பச்சன்..!!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2024, 4:23 pm

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன சமாஜ்வாடி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.

இந்த கூட்டத்தொடரின்போது மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் சில பாஜக எம்.பி.க்கள் ஜெய பச்சன் என்பதற்கு பதிலாக ஜெயா அமிதாப் பச்சன் என்று அழைத்தனர். இவ்வாறு தன்னை அழைப்பதற்கு ஜெயா பச்சனுக்கு உடன்பாடு இல்லை.

தன்னை ஜெயா பச்சன் என்று அழைத்தால் போதும், ஜெயா அமிதாப் பச்சன் என்று அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், சொந்த சாதனைகள் படைக்காத பெண்களுக்குதான் கணவர் பெயரால் அங்கீகாரம் தேவை.

அதனால் தன்னை அவ்வாறு அழைக்க வேண்டாம் எனக் கூறியிருந்தார். இருந்தபோதிலும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்டவர்கள் ஜெயா அமிதாப் பச்சன் என்றே அழைத்து வந்தனர்.

இன்றும் அதுபோல் அழைக்கப்பட்டதால் ஜெயா பச்சன் அதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார். ஆனால், ஜெக்தீப் தன்கர் எனக்கு அறிவுரை சொல்ல வேண்டாம் என்ற தொனியில் பதில் அளித்தார். இதனால் ஜெகதீப் தன்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெய பச்சன் கடும் வாக்குவாதம் செய்தார்.

மாநிலங்களவை தலைவரிடம் இருந்து எனக்கு மன்னிப்பு தேவை என்றார். ஜெயா பச்சனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

பின்னர், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த ஜெயாபச்சன் கூறுகையில் ஒவ்வொரு முறையும் அவைக்கு அப்பாற்பட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது.

தொல்லை கொடுப்பது போன்ற வார்தைகள். நீங்கள் பிரபலங்களாக (celebrity) இருக்கலாம். ஆனால் எனக்கு கவலை இல்லை போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.

அவர்களை கவலைப்பட வேண்டும் என நான் கேட்கவில்லை. நாடாளுமன்றத்தில் இப்போது பேசுவதுபோல் யாரும் பேசியதில்லை. இது பெண்களுக்கு மிகவும் அவமரியாதை என ஜெயா பச்சன் தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 247

    0

    0