இந்துக்களை அவமதிச்சிட்டீங்க.. மன்னிப்பு கேட்டே ஆகணும் ; ராகுலுக்கு எதிராக பாஜகவினர் வாய்ஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan1 July 2024, 7:28 pm
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடந்து வருகிறது.
இந்த விவாதத்தில் திமுக சார்பில் பேசிய ஆ.ராசா பாஜக சிறுபான்மையினரை ஒடுக்கப் பார்ப்பதாகவும் பாசிச கொள்கையைப் பின்பற்றுவதாகவும் சாடியுள்ளார். பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரப் போக்குடன் இருக்கிறது.
பாஜக நினைப்பதை அவர்களே பேசுவதில்லை. குடியரசுத் தலைவர், சபாநாயகர் ஆகியோரைச் சொல்ல வைக்கிறார்கள் என்று விமர்சித்தார்.
திராவிடக் கொள்கை ஏன் தேவை என்பதை பாஜக உணர வேண்டும் என வலியுறுத்திய ஆ.ராசா, “240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக தங்களுக்குப் பெரும்பான்மை உள்ளது என எப்படி கூறிக்கொள்ள முடியும். பாசிச கொள்கையை கடைபிடிக்கும் பாஜகவுக்கு அவசரநிலை பிரகடனம் பற்றி பேச அருகதை இல்லை. எமெர்ஜென்சியை அமல்படுத்தியதற்கு இந்திரா காந்தி பலமுறை மன்னிப்பு கேட்டார். அதனால்தான் மக்கள் மீண்டும் அவரை பிரதமர் ஆக்கினார்கள் என்று தெரிவித்தார்.
பாஜகவின் பாசிச கொள்கைக்கு பாடம் புகட்டுவதற்காகவே நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் 40 இடங்களை இந்தியா கூட்டணிக்கு வழங்கியுள்ளனர் என்று தெரிவித்த அவர், பெரியாரின் திராவிட மண்ணில் இருந்து வந்திருக்கிறேன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.
திராவிட மண் பாஜகவுக்கு பாடம் புகட்டியுள்ளது. சிறுபான்மையினர், பட்டியலினத்தோரை பாஜக அரசு நசுக்கப் பார்க்கிறது என்று ஆ.ராசா கூறினார்.