பஞ்சாபில் ஜலந்தரில் உள்ள ஒரு பேக்டரியில் தொழிலாளியாக பணியாற்றும் நபர் ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை நோக்கி ஒரு கார் வேகமாக வந்துள்ளது. அந்த காரில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம்பெண்கள் இருந்துள்ளனர். இதனையடுத்து காரில் இருந்த இளம்பெண்கள் ஒரு துண்டு சீட்டை நீட்டி அந்த நபரிடம் கொடுத்து முகவரி விவரம் குறித்து கேட்டுள்ளனர்.
அவர்கள் கூறியதை நம்பிய அந்த நபர் வாங்கி படித்துள்ளார். அப்போது அந்த பெண்கள் ஸ்பிரே ஒன்றை அவர் மீது அடித்துள்ளனர். இதனையடுத்து அவர் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரை தங்களது காரில் ஏற்றிக்கொண்டு பறந்தனர்.
பின்னர் மறைவான இடத்தில் காரை நிறுத்தி அவரது கை, கால்களை கட்டி போட்டு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்கள் குடித்துவிட்டு தன்னையும் குடிக்க வற்புறுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட நபர் கூறினார்.
அதன் பிறகு நான்கு இளம்பெண்களும் மாறி மாறி தன்னை பலாத்காரம் செய்ததாக அந்த நபர் கண்ணீர் மல்க கூறினர்.
இதனையடுத்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் அவரது கை மற்றும் கண்களை கட்டி ஏதோ ஒரு இடத்தில் இறக்கிவிட்டு சென்று விட்டனர். இதுகுறித்து அவர் செய்தி ஊடகங்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அந்த பெண்கள் பணக்காரர்கள் போல தெரிந்தவர்கள் என்றும் நன்றாக ஆங்கிலம் பேசினர் என்றும், தன்னிடம் 2 பெண்கள் பஞ்சாப் மொழியில் பேசினர் என அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த நபர் அந்த இளம்பெண்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரங்களில் இது போல் ஒரு ஆணை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த 4 பெண்களும் போதையில் இருந்தனரா, எதற்காக இது போல் செய்தனர் என்பதெல்லாம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவாக பெண்களையும் சிறுமிகளையும் கடத்திச் சென்று தான் பலாத்காரம் செய்து வரும் நிலையில் ஆண் ஒருவரை இளம்பெண்கள் கூட்டாக பலாத்காரம் செய்யும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
This website uses cookies.