பாலியல் புகாரில் சிக்கிய இளம் அமைச்சர்… ஜூனியர் தடகள பயிற்சியாளர் பரபரப்பு புகார் : நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு!!
Author: Udayachandran RadhaKrishnan1 January 2023, 3:42 pm
விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் உள்ள அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் சந்தீப் சிங்.
இந்த நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது சண்டிகர் போலீசார் பாலியல் புகார் பதிவு செய்துள்ளனர்.
ஜூனியர் தடகள பயிற்சியாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சண்டிகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அமைச்சர் சந்தீப் சிங்கின் குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலகத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. சந்தீப் சிங் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.