இளைஞரை மிரட்டி ஆபாசப் படம்… ஆளே இல்லாத அப்பார்ட்மென்டில்… பெண் இயக்குநர் கைது!!

Author: Babu Lakshmanan
25 February 2023, 11:21 am

இளைஞரை மிரட்டி ஆபாசப் படம் எடுத்ததாக பெண் இயக்குநரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் அருகே வெங்கானூரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்தார். இந்த நிலையில், அவரிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக மலையாள பெண் இயக்குனர் லட்சுமி தீப்தா கூறியுள்ளார்.

இதனை நம்பிய அந்த இளைஞரும் அருவிக்கரை பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு அப்பார்ட்மென்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு முதலில் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. பின் அவரிடம் நேரடியாக ஆபாச படம் எனக்கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்றுள்ளனர். இதுகுறித்து இளைஞர் அளித்த புகாரின் பேரில் லட்சுமி தீப்தாவை போலீசார் கைது செய்தனர்.

இளைஞரை மிரட்டி பெண் இயக்குநர் ஒருவர் ஆபாச படம் எடுக்க முயன்ற சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!