உங்களுடைய முதல்வர் சிங்கம்.. அவரை தலைகுனிய வைக்க முடியாது : ROAD SHOWவில் கெஜ்ரிவால் மனைவி பேச்சு!
Author: Udayachandran RadhaKrishnan27 April 2024, 8:47 pm
உங்களுடைய முதல்வர் சிங்கம்.. அவரை தலைகுனிய வைக்க முடியாது : ROAD SHOWவில் கெஜ்ரிவால் மனைவி பேச்சு!
டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால். இவரது மனைவி சுனிதா. கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி, பஞ்சாப், அரியானா மற்றும் குஜராத் மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என அக்கட்சியின் தலைவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று கிழக்கு டெல்லி தொகுதி வேட்பாளரை ஆதரித்து ரோடு ஷோ நடத்தினர். அப்போது அவர் கூறுகையில் நாம் சர்வாதிகாரத்தை நீக்கவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் வாக்களிக்க வேண்டும்.
மேலும் படிக்க: கைது செய்வதால் கடமை முடிந்ததா? DMK கவுன்சிலர் கைது.. வானதி சீனிவாசன் கண்டனம்!
உங்களடைய முதல்வர் (அரவிந்த கெஜ்ரிவால்) சிங்கம். அவரை உடைந்து போக செய்ய முடியாது. அவர் யாருக்கும் தலைகுனியமாட்டார்.
கெஜ்ரிவால் பள்ளிக்கூடங்களை கட்டினார். இலவச மின்சாரம் வழங்கினார். மொகல்லா கிளினிக் தொடங்கினார். இதனால் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார் என்றார்.
நாளை மேற்கு டெல்லி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரோடு ஷோ நடத்துகிறார்.