மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது: வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த போது கொடூரம்…!!
Author: Rajesh7 May 2022, 5:32 pm
ஷாஜஹான்பூர்: வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியை தூக்கிச் சென்று இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் இரவுநேர வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த 75 வயது மூதாட்டியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு 75 வயதுடைய மூதாட்டி, தனது வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அதேபகுதியை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை திடீரென தூக்கிக் கொண்டு அருகிலுள்ள வயல்வெளிக்கு கொண்டு சென்றார். பின் அந்த மூதாட்டியை வலுக்கட்டாயமாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டான். அடுத்த நாள் காலை வழக்கம் போல் மூதாட்டியின் அக்கம்பக்கத்தினர், அவர் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பல இடங்களில் தேடிப் பார்த்த நிலையில், வீட்டில் இருந்து 400 மீ தொலைவில் உள்ள அவரது வயல்வெளியில் நிர்வாண நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அந்த மூதாட்டியின் அந்தரங்க உறுப்புகளில் பலத்த காயங்கள் இருந்ததால், உடனே அவரை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.