காலில் விழச்சொல்லி இளைஞர் மீது கொடூரத் தாக்குதல் : வீடியோ வைரலான நிலையில் தாக்குதல் நடத்தியவர் கைது..!

Author: Babu Lakshmanan
8 August 2022, 4:51 pm

சமூக வலைதளத்தில் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி இளைஞர் ஒருவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து தாறுமாறாக தாக்கும் கொடூர காட்சிகள் வெளியாகி உள்ளன.

கேரள மாநிலம் கொல்லம், பூயப்பள்ளி பகுதியை சார்ந்தவர் ராகுல் என்பவர் கடந்த திங்கள் கிழமை வள்ளிக்குந்நம் பகுதியை சார்ந்த அச்சு என்ற இளைஞரை நேரில் வரவழைத்துள்ளார். அப்போது, தன்னை சமூக வலைதளங்களில் அவமானப்படுத்தியதாக கூறி முதலில் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்க மிரட்டி கூறிவிட்டு, குனிந்த படி மன்னிப்பு கேட்க சென்ற அச்சு என்ற இளைஞரை ராகுல் என்பவர் கண்மூடித்தனமாக தாறுமாறாக தாக்கியுள்ளார்.

இந்த காட்சிகள் ராகுலின் நண்பர்கள் ஒரு சிலர் செல்போன்களில் பதிவு செய்து இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வெளியாகி வைரல் ஆனதை தொடர்ந்து, தாக்குதல் வீடியோவை கண்ட கொல்லம், கருநாகப்பள்ளி போலீசார் ராகுல் என்பவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கொலை வழக்கு, பலாத்கார வழக்கு உட்பட பல வழக்குகளில் முக்கிய குற்றவாளி ராகுல் என்பதும் குறிப்பிடத்தக்கது. தாக்குதலுக்கு உள்ளான அச்சு தற்போது கொல்லம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இந்த கொடூர தாக்குதல் வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?