ரயில் வரும் போது தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்த இளைஞர் : அதிர்ச்சி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan13 March 2022, 12:26 pm
ஆந்திரா : துனி ரயில் நிலையத்தில் திடீரென ஓடும் ரயில் முன் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட வாலிபரின் சிசிடிவி காட்சி வெளியாக நடுநடுங்க வைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள துனி ரயில் நிலையத்தில் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் திடீரென்று அந்த வழியாக சென்று கொண்டிருந்த ரயிலின் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபரின் உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
இந்த நிலையில் ரயில் வரும் போது தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்த இளைஞரின் நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது