மகளின் காதலுக்கு எதிர்ப்பு… காதலனை ஆணவக் கொலை செய்த பெற்றோர் ; திரைப்பட பாணியில் அரங்கேறிய கொலை சம்பவம்!!

Author: Babu Lakshmanan
10 April 2023, 7:59 pm

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் ஜி.என்.ஆர்.எம் பகுதியை சேர்ந்த வாலிபர் நவீன். அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இரண்டு பேரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலில் இருந்ததாகவும், திருமணம் செய்து கொள்ள அவர்கள் திட்டமிட்டு இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மகளின் காதல் பற்றி தகவல் அறிந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நவீனை, அழைத்து காதலை கைவிடும்படி மிரட்டி உள்ளனர். அந்த பெண்ணை கைவிட தயாராக இல்லாத நவீன், திருமல் என்பவர் மூலம் காதலியின் குடும்பத்தாருடன் சமாதானம் பேச முயற்சி எடுத்தார்.

இதனை தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக எடுத்து கொண்ட அந்த பெண்ணின் உறவினர்கள் சமாதானம் பேசலாம் என்று நவீன் மற்றும் திருமல் ஆகியோரை குட்டுப்பள்ளிக்கு வரவழைத்தனர். அப்போது, அங்கு மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த பெண்ணின் உறவினர்கள், நவீனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த ஆணவபடுகொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் நவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

நவீன் மற்றும் அவருடைய காதலி ஆகியோர் இரண்டு வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 498

    0

    0