ஓடும் ரயிலில் இருந்து வெளியே குதித்த இளைஞர்… அலறிய பயணிகள் ; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

Author: Babu Lakshmanan
9 February 2024, 2:27 pm

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் அப்பாஞ்சிரா என்ற உன் இடத்தில் ஓடும் ரயிலில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த அன்சார் என்பவர் வேணாடு எக்ஸ்பிரஸில் இருந்து குதித்தார். குதித்த இளைஞர் தற்போது கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரயில்வே போலீசார் அவரை தடுக்க முயன்றனர், ஆனால் வாலிபர் ரயிலில் இருந்து கதவு வழியாக குதித்தார்.

அந்த இளைஞன் தற்போது கோட்டயம் மருத்துவ கல்லூரியில் உள்ளார். அன்சார் ரயிலின் கதவு படியில் இருந்து ஆபத்தான முறையில் பயணம் செய்து வந்தார். இதை பார்த்த பயணிகள் பலமுறை அவரை எச்சரித்துள்ளனர். குதித்ததற்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 363

    0

    0