அரசு வேலை கிடைத்த 24 மணிநேரத்தில் இளைஞர் கடத்தல்…துப்பாக்கி முனையில் நடந்த சம்பவம்; பீகாரில் பரபரப்பு!!!

Author: Babu Lakshmanan
1 December 2023, 5:55 pm

பீகாரில் அரசு வேலை கிடைத்த 24 மணிநேரத்தில் இளைஞரை கடத்தி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த கௌதம் குமார் என்பவர் ஆசிரியராக இருந்து வருகிறார். இவர் பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார். இதைத் தொடர்ந்து, படேபூரின் ரெபுராவில் உள்ள உத்கிராமித் மத்திய வித்யாலயா பள்ளியில் பணி வழங்கப்பட்டது.

இந்த உத்தரவு வந்து 24 மணிநேரத்தில், பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த கௌதம் குமாரை 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது. செங்கல் சூளை அதிபரான ராஜேஷ் ராய் என்பவரின் ஆட்கள் கடத்திச் சென்றது தெரிய வந்தது.

கடத்திச் சென்ற இடத்தில் கௌதம் குமாரை துப்பாக்கி முனையில் வைத்து, தனது மகள் சாந்தினிக்கு தாலி கட்டுமாறு மிரட்டி, திருமணம் செய்து வைத்துள்ளார். துப்பாக்கியை பார்த்து பயந்து போன ஆசிரியரும் வேறு வழியின்றி தாலியை கட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பீகாரில் அரசு வேலை அல்லது நல்ல வேலைகளில் இருக்கும் இளைஞர்களை கடத்திச் சென்று திருமணம் செய்வது வாடிக்கையாகி விட்டது. அண்மையில் கால்நடை மருத்துவரை கடத்திச் சென்று பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

  • Vanitha Talked About his marriage and Reply to haters நான் 40 கல்யாணம் கூட பண்ணுவேன்.. என்னால முடியும்.. உங்களுக்கென்ன? வனிதா அதிரடி!