சுயலாபத்திற்காக கட்சி மாறுபவர்கள் செல்வாக்குடன் அரசியலில் நீடிக்க முடியாது : சொல்கிறார் முன்னாள் அமைச்சர்!

Author: Udayachandran RadhaKrishnan
31 ஆகஸ்ட் 2024, 4:04 மணி
Roja
Quick Share

ஆந்திர முன்னாள் அமைச்சர், முன்னாள் நடிகை ரோஜா சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின் இன்று ஏழுமலையானை வழிபட திருப்பதி மலைக்கு வந்திருந்தார்.

சாமி கும்பிட்ட பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது ஆந்திராவில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை, கொலை ஆகியவற்றை கண்டித்து பேசிய அவர், கிருஷ்ணா மாவட்டம் குட்லவெல்லூரில் கல்லூரி பெண்கள் ஹாஸ்டல் கழிவறையில் சிசிடிவி கேமராவை பொருத்திய நபரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கூறினார்.

ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர்கள் தங்கள் பதவியை துறந்து விட்டு கட்சிமாற இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒரு கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் ஆகியவற்றுக்கு உட்பட்டு அந்த கட்சியில் சேர்ந்து பதவிகளை பெற்றவர்கள் பின்னர் ஏதோ ஒரு காரணம் கூறி கட்சி மாறுவது சரியல்ல.
.
அவ்வாறு கட்சி மாறுபவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது. அத்தகையோர் செல்வாக்குடன் அரசியலில் நீடிக்க இயலாது என்று கூறினார்.

  • PK என்ன ஒரு தைரியம்… புதிய கட்சியை தொடங்கி மதுக்கடைகளை திறப்பேன் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!
  • Views: - 255

    0

    0