கோவையில் மேயர் பதவி உட்பட அனைத்து பதவிகளையும் அதிமுக கைப்பற்றும்: வாக்களித்த பின் எஸ்.பி.வேலுமணி பேட்டி..!!

Author: Rajesh
19 February 2022, 9:27 am

கோவை : கோவையில் மேயர் பதவி உட்பட அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளையும் அதிமுக கைப்பற்றும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணித் தெரிவித்துள்ளார்.

கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது., கோவையில் மேயர் பதவி உட்பட அனைத்து நகராட்சி,பேரூராட்சிகளையும் அதிமுக கைப்பற்றும். அதிமுக வெற்றி பெற்றுவிடும் என்ற பயத்தில் திமுகவினர் தொடர்ந்து அராஜக செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாங்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியதன் அடிப்படையில், ஆட்சியர் அறிக்கைவிட்டு வெளியூர் ஆட்கள் இருக்ககூடாது என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும்,இன்னும் கோவையின் பல்வேறு இடங்களில் வெளியூர் ஆட்கள் இருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதிமுக வெற்றி பெறும் வார்டுகளில் கூட திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்குமாறு அவர்கள் கூட்டம் நடத்தி முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு வாக்கு சாவடிமையத்திலும் தேர்தல் அலுவலர்களும் ,காவலர்களும் நேரடியாக கண்கானிக்க வேண்டும் என அவர் கூறினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ