வாக்காளர்களுக்கு ஹாட்பாக்ஸ் விநியோகிக்க முயற்சி: கோவை திமுக பொறுப்பாளரை சுற்றிவளைத்த பொதுமக்கள்…பறக்கும் படையிடம் ஒப்படைப்பு..!!
Author: Rajesh14 February 2022, 8:44 am
கோவை: குனியமுத்தூர் பகுதியில் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக திமுகவினர் கொண்டு வந்த ஹாட்பாக்ஸ் குவியலை பொதுமக்கள் பிடித்து பறக்கும்படையிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குணியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக திமுகவை சுகுணாபுரம் பகுதியை சேர்ந்த கிருபாகரன் என்பவரது வீட்டிற்கு சிறிய சரக்கு ஆட்டோவில் கரூரை சேர்ந்தவர்கள் ஹாட்பாக்ஸ்களை கொண்டு வந்துள்ளனர்.
இதையறிந்த பொதுமக்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தி பிரச்சினையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தகவல் அறிந்த கோவை குணியமுத்தூர் காவல் நிலைய போலிசாரும் , பறக்கும் படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டுவந்தனர்.
இந்த நிலையில் தகவல் அறிந்த அதிமுக தொண்டர்கள் சம்பவ இடத்திலும், காவல் நிலையத்திலும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கோவை மாவட்டம் முழுவதும் திமுகவின் பொறுப்பாளர்கள் வீட்டில் பரிசு பொருட்களை திமுகவினர் குவித்து வைத்துள்ளதால், திமுக பொறுப்பாளர்களின் அனைவரது வீடுகளிலும் உடனடியாக சோதனை செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.