நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022: வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது..!!

Author: Rajesh
22 February 2022, 8:21 am

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிவில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

முறைகேடு புகார் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதன்பின்பு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்படும். பின்னர் கன்ட்ரோல் யூனிட்டில் இருக்கும் ‘சீல்’ வேட்பாளர்கள் முன்னிலையில் உடைக்கப்படும்.

இதைத்தொடர்ந்து கன்ட்ரோல் யூனிட்டில் சின்னம் வாரியாக பதிவான வாக்குகள் சேகரிக்கப்படும். இதுவே, ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கையாக கருதப்படும். மாநகராட்சி, நகராட்சியை பொறுத்தமட்டில் பெரும்பாலான வார்டுகளுக்கான தேர்தல் 40க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் நடைபெற்றதால் அதிகபட்சமாக 4 சுற்றுகள் வரை ஓட்டுகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை முழுமையாக வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சுற்று முடிவு விவரம் வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியில் உள்ள அறிவிப்பு பலகையில் ஓட்டப்பட்டு வருகிறது . மேலும், ஒலி பெருக்கி மூலமும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…