இந்தியாவில் ஒலிம்பிக் 2036? விருப்பம் தெரிவித்த சங்கம்!

Author: Hariharasudhan
5 நவம்பர் 2024, 6:40 மணி
Quick Share

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் 2036 ஆம் ஆண்டு நடத்த விருப்பம் தெரிவித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

டெல்லி: இந்தியாவில் 2036ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதி உள்ளது. சுமார் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இது சர்வதேச அளவில் மிகவும் கவனம் பெற்ற விளையாட்டு ஆகும். ஏனென்றால், இப்போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பர்.

அதிலும் குறிப்பாக இது தடகளப் போட்டிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் என அடுத்தடுத்து நடைபெறும் .இவ்வாறு நடைபெறும் நாட்டில் விளையாட்டு என்பது முதன்மை பெறும் எனவும் சர்வதேச அளவில் கவனிக்கப்படுகிறது.

Olympics

அந்த வகையில், வருகிற 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா தயாராக இருப்பதாக சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், 2036ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த அனுமதிக்க வேண்டும் என இந்தியா தனது விருப்பத்தை அதிகாரப்பூர்வமாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டால், இந்தியா புதிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தும் என்பதில் ஐயமில்லை. முன்னதாக 2032ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இதையும் படிங்க: சிஎஸ்கே விக்கெட் கீப்பர் மாற்றமா? விருப்பம் தெரிவித்த பிரபல வீரர்!

இதன்படி, 2024 ஒலிம்பிக் மற்றும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ், ஒலிம்பிக் 2032 ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதனை அடுத்து தான் 2036 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த இந்திய அரசு விருப்பம் தெரிவித்திருக்கிறது.

மேலும், இதுவரை இந்தியாவில் நடைபெற்ற முக்கிய சாம்பியன்ஷிப் போட்டிகள் 1982 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு, 2010ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு ஆகும். மேலும் இது தொடர்பான கடிதத்தை இந்திய விளையாட்டு துறை அமைச்சகம் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது._

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 34

    0

    0

    மறுமொழி இடவும்