இந்த முறை மிஸ்ஸே ஆகாது… ஆஸ்திரேலியாவை புரட்டியெடுத்த இளம் இந்தியா ; சூர்யகுமார் யாதவ் ருத்ரதாண்டவம்..!!

Author: Babu Lakshmanan
24 November 2023, 9:36 am

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு, ஆஸ்திரேலியா அணி இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதல் போட்டியில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி, ஜோஷ் இங்கிலிஸ் (110), ஸ்மித் (52) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து, பேட் செய்த இந்திய அணி சூர்ய குமார் யாதவ் (80), இஷான் கிஷான் (58) ஆகியோரின் அபார ஆட்டத்தால் கடைசி ஓவரில் ஒரு பந்து மீதமிருந்த நிலையில், 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

இதன்மூலம், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி பதிலடி கொடுத்துள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!