உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு இருக்கா…? இல்லையா…? முழு அணி விபரம் இதோ..!!
Author: Babu Lakshmanan5 September 2023, 1:57 pm
ஐசிசி கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான 50 ஓவர் உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. முதல் போட்டி இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அக்டோபர் 5ம் தேதி மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியாவின் முதல் ஆட்டம் அக்டோபர் 8ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதேபோல, உலகமே பெரிதும் எதிர்பார்த்துள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் 5 போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது.
உலகக்கோப்பை தொடருக்கு ஆயத்தமாகும் வகையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்த நிலையில், 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ரோகித் ஷர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்திய அணியின் வீரர்கள் அப்படியே, உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளனர். இதில், கடந்த சில நாட்களாக ஒதுங்கியிருக்கும் கேஎல் ராகுல் மட்டும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். அதேபோல, ஸ்ரேயாஷ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதேவேளையில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அணி விபரம் ; ரோகித் ஷர்மா (C), விராட் கோலி, கில், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, அக்ஷர் படேல், ஷர்துல் தாகூர்.