2024 ஐபிஎல் திருவிழா ஆரம்பம்… சேப்பாக்கத்தில் முதல் போட்டி : வெளியானது அட்டவணை!!

Author: Udayachandran RadhaKrishnan
22 February 2024, 6:38 pm

2024 ஐபிஎல் திருவிழா ஆரம்பம்… சேப்பாக்கத்தில் முதல் போட்டி : வெளியானது அட்டவணை!!

இந்த ஆண்டில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வருகின்ற மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கும் என அதிகார பூர்வ அறிவுப்பு வெளியாகியது. எல்லா ஆண்டும் வழக்கமாக ஐபிஎல் தொடங்கும் முன் இரு மாதங்களுக்கு முன்பே அதற்கான அட்டவணை வெளியாகி விடும். ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக ஐபிஎல் போட்டியின் அட்டவணையை சற்று தாமதமாக வெளியிட்டுள்ளனர்.

இதில் சென்னையில் முதல் போட்டி நடக்க போவதாகவும், சென்னையும், குஜராத் அணியும் முதல் போட்டி விளையாட போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், தற்போது வெளியாகி உள்ள அட்டவணையில் முதல் போட்டியாக வருகிற மார்ச்-22ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது.

ஐபிஎல் லீக்கின் தலைவரான அருண் துமால் தெரிவித்தது போல ஐபிஎல் தொடரின் அட்டவணையில் பாதி போட்டிக்கான அறிவிப்பை மட்டும் வெளியிட்டுயுள்ளனர். அந்த அட்டவணையில் மார்ச் -22 முதல் ஏப்ரல் – 7 ம் தேதி வரை நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் மட்டும் வெளியாகி இருக்கிறது. மீதம் நடைபெறும் போட்டிக்கான அட்டவணையை நாடுளுமன்ற தேர்தலின் தேதியை அறிவித்ததற்கு பிறகு வெளியிடுவார்கள். மொத்தம் 17 நாட்களில் 21 போட்டிகள் நடைபெற உள்ளது.

தற்போது, வெளியிட்டுள்ள இந்த அட்டவணையின் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்த 4 போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கத்திலும் அடுத்த இரண்டு போட்டிகள் வைசாக் மற்றும் ஐதராபாத்திலும் விளையாடவுள்ளது. ஐபிஎல்-ன் முதல் போட்டி சென்னையில் நடைபெறுவதால் சென்னை அணியின் ரசிகர்கள் தல தோனியின் தரிசனத்தை காண ஆவலுடன் இருக்கின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1209

    0

    0