வார்னரை தொடர்ந்து தாயகம் திரும்பிய முக்கிய வீரர் : அதிர்ச்சியில் ரசிகர்கள்.. இந்தியாவை சமாளிக்குமா ஆஸ்திரேலியா..?

Author: Babu Lakshmanan
20 February 2023, 12:58 pm

வார்னரை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் சொந்த நாட்டுக்கு திரும்பியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி, முதல் இரண்டு போட்டிகளில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதன்மூலம், 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. டெல்லியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின் போது, தொடக்க வீரர் வார்னர், காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது அந்த அணிக்க பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் திடீரென தனது சொந்த நாட்டுக்கு திரும்பி உள்ளார். சொந்த காரணங்களுக்காக சில நாட்கள் அவர் ஆஸ்திரேலியாவில் தங்குகிறார். இருப்பினும், மார்ச் 1ம் தேதி நடக்கும் இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்காக பேட் கம்மின்ஸ் இந்தியாவுக்கு வருவார் என்றபோதிலும், ஒருவேளை அவரால் வரமுடியாமல் போனால், துணை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அணியை வழி நடத்தி செல்வார் என தெரிகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டனாக 2021ம் ஆண்டு இறுதியில் கம்மின்ஸ் அறிவிக்கப்பட்ட பிறகு 2 முறை ஸ்மித் அணியை வழி நடத்தி சென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி தடுமாறி வரும் நிலையில், அடுத்தடுத்து அந்த அணியின் வீரர்களின் ஆப்சென்ட் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…