50 ஓவர் உலகக்கோப்பை போட்டி அட்டவணை வெளியீடு… சென்னையில் இத்தனை ஆட்டங்களா…? இந்திய – பாக்., மோதும் ஆட்டம் எங்கு தெரியுமா..?
Author: Babu Lakshmanan27 June 2023, 1:07 pm
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது.
ஐசிசி கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான 50 ஓவர் உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தத் தொடர் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்து.
இந்த நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. முதல் போட்டி இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அக்டோபர் 5ம் தேதி மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியாவின் முதல் ஆட்டம் அக்டோபர் 8ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதேபோல, உலகமே பெரிதும் எதிர்பார்த்துள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் 5 போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது.
ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நவம்பர் 19-ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டி அட்டவணையை கீழே பார்க்கலாம்..
