டி20 உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என்று பெரும்பாலான முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து கூறினர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது.
க்ரூப் 1லிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும், க்ரூப் 2லிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. சூப்பர் 12 சுற்றில் அபாரமாக விளையாடிய தென்னாப்பிரிக்க அணி கண்டிப்பாக அரையிறுதிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறியது தென்னாப்பிரிக்கா. அதனால் வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் நியூசிலாந்தும் பாகிஸ்தானும் சிட்னியில் பலப்பரீட்சை நடத்தியது. அதில் பாகிஸ்தான் அபாராமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
நாளை அடிலெய்டில் நடக்கும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், இந்திய அணி குறித்து பேசியுள்ள தென்னாப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ், இந்திய அணியில் அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆடிவருகின்றனர். சூர்யகுமார் யாதவ் நல்ல ஃபார்மில் உள்ளார். விராட் கோலியும் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். ரோஹித் சர்மா இதுவரை பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. ஆனால் அணிக்கு தேவைப்படும்போது முக்கியமான கட்டத்தில் ரோஹித் கண்டிப்பாக சிறப்பாக ஆடுவார்.
அருமையான மற்றும் மிகத்திறமையான வீரர் ரோஹித். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டி இந்தியாவிற்கு பெரிய டெஸ்ட்டாக இருக்கும். அரையிறுதியில் இந்தியா ஜெயித்து ஃபைனலுக்கு சென்றால் கண்டிப்பாக இந்திய அணி கோப்பையை வென்றுவிடும் என்று டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.