‘ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே’ ; BIG BASH தொடரில் ஜம்பா செய்த காரியம் ; கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்!!

Author: Babu Lakshmanan
3 January 2023, 5:36 pm

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை போன்றே ஆஸ்திரேலியாவில் பிக் பேஸ் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 27வது போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் – மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கேப்டன் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் ஆடம் ஜம்பா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, ரெனிகேட்ஸ் அணி முதலில் இறங்கி பேட் செய்து கொண்டிருந்தது. கடைசி ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருந்த போது, அந்த அணியின் ஹார்வே பேட் செய்கையில், ரோஜர் எதிர்முனையில் நின்று கொண்டிருந்தார்.

கடைசி ஓவரை வீசிய ஜம்பா பந்து வீச முயன்ற போது, ரோஜர் கிரீஸை விட்டு வெளியேறினார். அப்போது, பந்து வீச வந்த ஜம்பா, பந்தை வீசாமல், எதிர்முனையில் இருந்த ரோஜரை மன்கட் முறையில் அவுட்டாக்கி, அப்பில் செய்தார். இதனால், மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ரோஜரும் என்ன நடந்தது என்பதை போல அதிர்ச்சியில் இருந்தார்.

பிறகு களநடுவர் 3வது நடுவரிடம் ரிவ்யூ செய்தார். அதில், அவர் கை ஆக்ஷன் முழுமையாக இருந்ததால், நாட் அவுட் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், ஜம்பா அதிருப்தியடைந்தார்.

ஜம்பாவின் இந்த செயலின் மூலம், அவர் ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த வீரர் என்பதை உறுதி செய்வதாக நெட்டிசன்கள் கிண்டலடிக்கின்றனர். அண்மையில் நடந்த முடிந்த மினி ஏலத்தில் ராஜஸ்தான் அணி அவரை எடுத்தது.

ஏற்கனவே, ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் வீரர் பட்லரை, பஞ்சாப் அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் மன்கட் மூலம் ஆட்டமிழக்கச் செய்த நிலையில், தற்போது ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த ஜம்பா இப்படி செய்துள்ளார் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?
  • Close menu