ஐபிஎல் அணியை வாங்கும் அதானி குழுமம்.. இங்கயும் வந்தாச்சா? எந்த அணி தெரியுமா?!!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2024, 2:29 pm

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் 2022 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டமும், 2023 ஆம் ஆண்டு இரண்டாம் இடம் பிடித்த அணி குஜராத் டைட்டன்ஸ். சிவிசி கேப்பிட்டல் பார்ட்னர்ஸ் என்ற தனியார் நிறுவனம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் உரிமையாளராக உள்ளது. இந்நிறுவனம் பெரும்பாலான பங்குகளை விற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானியின் அதானி குழுமம் மற்றும் டொரென்க் குழுமம் சிவிசி கேப்பிட்டல்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அணியில் பெரும்பான்மை பங்குகளை தக்கவைத்துக் கொள்ளும் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி உள்ளது.

எனினும், அதானி குழுமம் மற்றும் டொரென்ட் குழுமம் குஜராத் அணியில் அதிக பங்குகளை வாங்க ஆர்வம் செலுத்துவதாக தெரிகிறது. தற்போதைய மதிப்பீட்டின் படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் மொத்த மதிப்பு 1 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 363 கோடியே 25 லட்சம் துவங்கி அதிகபட்சம் 1.5 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரத்து 544 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக 2021 ஆம் ஆண்டு சிவிசி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் இந்த அணியை ரூ. 5 ஆயிரத்து 625 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 1109

    0

    0