தூங்கி கொண்டிருந்த சாலையோர ஏழைகளுக்கு தெரியாமலேயே பணம் வைத்த ஆப்கானிஸ்தான் வீரர்… நெகிழ வைத்த வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
13 November 2023, 8:54 am

தூங்கி கொண்டிருந்த சாலையோர ஏழைகளுக்கு தெரியாமலேயே பணம் வைத்த ஆப்கானிஸ்தான் வீரர்… நெகிழ வைத்த வீடியோ!!!

நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அட்டகாசமான திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது.

லீக் சுற்றில் நடந்து முடிந்த 9 ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான் 4 போட்டிகளில் வெற்றி பெற்றது. குறிப்பாக அந்த அணி சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வென்றது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில், வெற்றியை நூலிழையில் கோட்டை விட்டது.

லீக் போட்டிகள் அனைத்தையும் முடித்துக் கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி தற்போது தாயகம் திரும்ப தொடங்கியுள்ளது. இதற்கிடையே அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரஹ்மானுல்லா குர்பாஸ் அகமதாபாத் நகரில் சாலையோர ஏழைகளுக்கு நள்ளிரவில் பண உதவி செய்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்தபோது சுற்றிலும் யாரும் இல்லாத சூழல் காணப்பட்டுள்ளது. யாரோ ஒரு நபர் தூரத்தில் நின்று மொபைல் போனில் ஜூம் செய்து பண உதவி வழங்கும் காட்சியை படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பலரும் ரஹ்மானுல்லா குர்பாஸிற்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் கூறியுள்ளனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 650

    0

    0