15 வருடத்திற்கு பிறகு கொல்கத்தா அணி புதிய சாதனை… டெண்டுல்கர் மகனுக்கு 2 ஓவர் மட்டுமே வீச அனுமதி.. மும்பை அணி வெல்லுமா?!!
Author: Udayachandran RadhaKrishnan16 April 2023, 5:52 pm
கடந்த சில காலமாக பார்மில் இல்லாமல் தவித்த வெங்கடேஷ் ஐயர், நடப்பு ஐபிஎல் சீசனில் தன்னுடைய அதிரடி ஆட்டத்திற்கு திரும்பி உள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மூலம், கொல்கத்தா அணிக்காக விளையாடிய வெங்கடேஷ் ஐயர், யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக செயல்பட்டார்.
இதனால் வெங்கடேஷ் ஐயருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துவிட்டது. எனினும் அதன் பிறகு காயம், பார்ம் அவுட் போன்ற காரணத்தால், இந்திய அணியில் தமது இடத்தை இழந்தார். கடந்த சீசனில் 12 போட்டியில் மட்டும் விளையாடிய வெங்கடேஷ் ஐயர், வெறும் 182 ரன்கள் மட்டுமே அடித்தார்.
எனினும் நடப்பு சீசனில் வெங்கடேஷ் ஐயர் தனது பழைய பார்மை மீட்டு எடுத்தார். பஞ்சாப்க்கு எதிராக 34 ரன்களும், பெங்களூருக்கு எதிராக 3 ரன்களும் எடுத்த வெங்கடேஷ் ஐயர், குஜராத்துக்கு எதிராக 83 ரன்களை விளாசி ரசிகர்களுக்கு டிரீட் கொடுத்தார். இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸக்கு எதிராக வெங்கடேஷ் ஐயர் தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த போட்டியில் இன்னொரு முக்கிய நிகழ்வு என்னவென்றால், சச்சின் மகன் அர்ஜுன் களமிறங்கியதுதான். முதல் ஓவரை சற்று கடினமாக வீசினார். பின்னர் இரண்டாவது ஓவரில் 12 ரன்கள் கொடுத்தார். மொத்தம் 2 ஓவரில் 17 ரன்களை கொடுத்திருந்தார், ஆனால் அதன் பிறகு அவருக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை.