மைதானத்தில் திடீர் பரபரப்பு.. போராட்டக்காரரை அலேக்காக தூக்கி சென்று எரிந்த இங்கிலாந்து வீரர்.. ஆஷஸ் போட்டியின் போது பதற்றம்..!!
Author: Babu Lakshmanan28 June 2023, 4:31 pm
இங்கிலாந்து – ஆஸ்திரேலியான அணிகள் விளையாடும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி புறப்பட்டுச் சென்றுள்ளது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இங்கிலாந்து அணியில் கடந்த ஆட்டத்தில் காயம் அடைந்த மொயீன் அலிக்கு பதிலாக ஜோஷ் டங்கும், ஆஸ்திரேலிய அணியில் ஸ்காட் போலந்துக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க்கும் இடம் பிடித்துள்ளனர்.
போட்டி தொடங்கி சில நிமிடங்களில், Just Stop Oil என்னும் சமூக ஆர்வல அமைப்பைச் சேர்ந்த இருவர், கலர் பொடியை தூவியவாறு மைதானத்திற்குள் ஓட்டம் பிடித்தனர். அப்போது, அவர்களை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர். அந்த சமயம் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ், போராட்டக்காரர்களில் ஒருவரை மடக்கி பிடித்தார். பின்னர், அவரை தூக்கிக் கொண்டு, பவுண்டரி எல்லையில் கொண்டு சென்று போலீசாரிடம் ஒப்படைத்து விட்டு வந்தார். இந்த சம்பவத்தால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அண்மையில் இங்கிலாந்து அரசு புதைவடிவ எரிபொருட்களை எடுக்க அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து Just Stop Oil அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.