சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய அஸ்வின் : 3வது இந்தியர் என்ற சாதனையை படைத்து அசத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2023, 11:59 am

வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று டாமினிகா மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் விக்கெட்டாக டேக்னரின் சந்தர்பால்(12 ரன்கள்) விக்கெட்டை இந்திய வீரர் அஷ்வின் எடுத்த போது, டெஸ்ட் போட்டிகளில் தந்தை-மகன் என இருவரின் விக்கெட்களையும் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன்னதாக 2011 டெஸ்ட் தொடரின் போது ஷிவ்னரின் சந்தர்பால் விக்கெட்டை அஷ்வின், எடுத்திருந்தார். நேற்று முதல் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி, அஷ்வினின்(5 விக்கெட்கள்) சிறப்பான பந்துவீச்சால் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

மேலும் இந்த போட்டியில் அஷ்வின் எடுத்த விக்கெட்கள் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்களையும் கடந்துள்ளார். கும்ப்ளே 953 விக்கெட்களும், ஹர்பஜன் 707 விக்கெட்களும், தற்போது அஷ்வின் இந்த லிஸ்டில் 3-வது இடத்தில் இருக்கிறார்.

இதையடுத்து இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது, களத்தில் ஜெய்ஸ்வால் 40* மற்றும் ரோஹித் 30* ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 489

    0

    0