இந்த முறை மிஸ்ஸே ஆகாது… வெயிட்டு காட்டும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி… மீண்டும் கேஎல் ராகுல், ஸ்ரேயாஷ் ஐயர்..!!

Author: Babu Lakshmanan
21 August 2023, 2:20 pm

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொடரில் விளையாடும் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் தங்களின் அணியை அறிவித்து விட்டன.

இந்த நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு கேஎல் ராகுல், பும்ரா மற்றும் ஸ்ரேயாஷ் ஐயர் ஆகியோர் மீண்டும் திரும்பியுள்ளனர்.

இந்திய அணியின் முழு விவரம் வருமாறு:- ரோஹித் சர்மா (கேப்டன்) விராட் கோலி, சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், அக்சர் பட்டேல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரிசர்வ் வீரராக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!