இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்…? ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் பலப்பரீட்சை..!!

Author: Babu Lakshmanan
4 September 2022, 11:53 am

ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் துபாயில் நடந்து வருகிறது. இத்தொடரின் இன்றைய சூப்பர் 4 சுற்றிள் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் இவ்விரு அணிகள் இன்று மோதுகின்றன.

காயம் காரணமாக விலகிய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள அக்‌ஷர் பட்டேல் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, முந்தைய ஆட்டத்தில் காயம் அடைந்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தஹானி இந்த ஆட்டத்தில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக ஹசன் அலி அல்லது முகமது ஹஸ்னைன் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும் என்று தெரிகிறது.

1சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 7-ல் இந்தியாவும், 2-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்று இருக்கின்றன. சமனில் முடிந்த மற்றொரு ஆட்டத்தில் பவுல்-அவுட் முறையில் இந்தியா வெற்றி பெற்றது.

பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 2-வது வெற்றியை ருசிக்க இந்திய அணி தனது முழுபலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!