அதிரடி காட்டிய திலக் வர்மா… வங்கதேசத்தை பந்தாடிய தமிழக வீரர்கள் ; ஆசிய போட்டியில் பதக்கத்தை உறுதி செய்த இளம் இந்திய அணி..!!

Author: Babu Lakshmanan
6 October 2023, 10:41 am

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

ஆசிய விளையாட்டு போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின. இதில், முதலில் விளையாடிய வங்கதேச அணி இந்திய பவுலர்களை எதிர்க்க முடியாமல் திணறினர். இதனால், அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டும், வாசிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா, ரவி பிஷ்னாய், ஷாபாஷ் அகமது தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து, பேட் செய்த இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் ரன் எதுவுமின்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். பின்னர், கேப்டன் ருத்துராஜுடன் கைகோர்த்த திலக் வர்மா அதிரடி காட்டினர். இறுதியில் இந்திய அணி 9.2 ஓவர்களில் இலக்கை அடைந்து பைனலுக்கு முன்னேறியது. அதிரடியாக ஆடிய திலக் வர்மா 26 பந்துகளில் 55 ரன்களும், கெயிக்வாட் 26 பந்துகளில் 40 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதன்மூலம், ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி பதக்கத்தை உறுதி செய்தது. ஏற்கனவே, மகளிர் கிரிக்கெட் அணி ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ