சொந்த மண்ணில் ஆஸி., அணியை முதன்முறையாக… இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 December 2023, 4:32 pm

சொந்த மண்ணில் ஆஸி., அணியை முதன்முறையாக… இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை!!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கிடையே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 77.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 219 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக தஹ்லியா மெக்ராத் 50 ரன்களும், மூனி 40 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியில் பூஜா வஸ்த்ரகர் 4 விக்கெட்டையும், சினே ராணா 3 விக்கெட்டையும் பறித்தனர். இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் இந்திய மகளிர் அணி 126.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 406 ரன்கள் எடுத்தனர். தீப்தி ஷர்மா78, ஸ்மிருதி மந்தனா 74 , ஜெமிமா ரோட்ரிக்ஸ் 73, ரிச்சா கோஷ் 52, பூஜா வஸ்த்ரகர் 47 ரன்கள் குவித்தனர். இதனால் இந்திய அணி 187 ரன்கள் முன்னிலையில் இருந்த போது ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 261 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக தஹ்லியா மெக்ராத் 73 ரன்களும், எல்லிஸ் பெர்ரி 45 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் சினே ராணா 4 விக்கெட்டுகளையும், ராஜேஷ்வர் கெய்க்வாட் , ஹர்மன்பிரீத் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதனால், இந்தியாவிற்கு 75 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழந்து 75 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்முலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக வென்று இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.

1977 முதல் இரு அணிகளுக்கும் இடையில் நடந்த 11 போட்டிகளில் ஆஸ்திரேலியா 4 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஆறு போட்டிகள் ராவில் முடிந்தன. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா மகளிர் அணி ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. வரும் 28-ஆம் தேதி இரு அணிகளும் முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 696

    0

    0