ஆஸி., அணிக்கு இமாலய இலக்கு.. பவுலிங், பேட்டிங்கில் அதிரடி காட்டிய இந்திய வீரர்களுக்கு காத்திருந்த ட்விஸ்ட்!!
Author: Udayachandran RadhaKrishnan24 செப்டம்பர் 2023, 8:01 மணி
ஆஸி., அணிக்கு இமாலய இலக்கு.. பவுலிங், பேட்டிங்கில் அதிரடி காட்டும் இந்திய வீரர்கள்!!
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ள இந்திய அணி தொடக்கத்தில் இருந்து அருமையாக விளையாடி வருகிறது. முதலில் வந்த ருத்ராஜ் மற்றும் சுப்மன் கில் ஜோடி நிதானமாக விளையாடியது. ஒரு பக்கம் கில் அதிரடியாக விளையாடினார். மற்றோரு பக்கம் நின்று கொண்டு இருந்த ருத்ராஜ் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பிறகு களத்திற்கு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக விளையாடி இருவருமே சதம் அடித்தனர். சுப்மன் கில் 97 பந்துகளில் 104 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 90 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தனர். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் செய்து 200 ரன்களுக்கு மேல் குவித்தனர். பிறகு ஷ்ரேயாஸ் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் சுப்மன் கில்லும் வெளியேறினார்.
பின், களத்திற்கு வந்த கேப்டன் கேஎல் ராகுல் , இஷான் கிஷனும் இணைந்து நன்றாக விளையாடினார்கள். பிறகு கேஎல் ராகுல் 52 ரன்களில் ஆட்டமிழக்க, இஷான் கிஷனும் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்கள். பிறகு சூர்யகுமார் யாதவ் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 72* அவருடன் ரவீந்திர ஜடேஜா 13* ரன்கள் எடுத்தனர்.
இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது.
பந்துவீச்சை பொறுத்தவரையில், ஆஸ்திரேலியா அணியில் கேமரூன் கிரீன் 10 ஓவர்கள் பந்துவீசி 2 விக்கெட்களையும், ஜோஷ் ஹேசில்வுட், சீன் அபோட், ஆடம் ஜம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.
,இதையடுத்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸி., வீரர்களுக்கு இந்திய அணி பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி கொடுத்தனர். பிரசித் பந்தில் மேத்யூ ஷார்ட் 9 ரன்னில் பெவிலியின் திரும்பினார்.
மறுமுனையில் வார்னர் கம்பீர ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து களமிறங்கியல் கேப்டன் ஸ்மித் பிரசித் பந்தில் டக்அவுட் ஆனார். பின்னர் வந்த மார்னஸ் நேர்த்தியாக ஆடினார். 9 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 56 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
0
0