சூறாவளி போல சுழன்றடித்த மேக்ஸ்வெல்… அதிரடி சதம் ; ரோகித் ஷர்மாவின் சாதனை சமன்..!!

Author: Babu Lakshmanan
11 February 2024, 7:29 pm

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்கம் முதலே ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 241 ரன்கள் சேர்த்தது.

இந்தப் போட்டியில் சதம் விளாசிய மேக்ஸ்வெல் இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவின் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். அதாவது, சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் ஷர்மாவுடன் (5 சதம்) முதலிடத்தை பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக, சூர்யகுமார் யாதவ் (4), பாபர் ஆசம் (3), காலின் முன்ரோ (3) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!