வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 410 ரன்களை குவித்துள்ளது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய அணி தொடரை இழந்தது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
கடந்த போட்டியில் காயம் அடைந்த கேப்டன் ரோகித் சர்மா தொடரில் இருந்து விலகி விட்டார். மேலும், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகியோரும் விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக, இஷான் கிஷான், குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு இந்த முறையும் தவான் (3) ஏமாற்றம் கொடுத்தார். பின்னர், இளம் வீரர் இஷான் கிஷானுடன் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஆனால், ஒருகட்டத்தில் தொடக்கவீரர் இஷான் கிஷான் அதிரடி காட்டத் தொடங்கினார்.
இதனால், 85 பந்துகளில் அவர் தனது முதல் சர்வதேச சதத்தை அடித்தார். பின்னர், அதிரடி காட்டிய அவர் சிக்சருக்கு, பவுண்டரிக்குமாக பந்துகளை பறக்கவிட்டார். இதனால், இஷான் கிஷான் முதல்முறையாக 200 ரன்களை விளாசினார். அப்போது, இஷான் கிஷானின் சாதனையை கொண்டாடும் விதமாக, சக வீரரான கோலி நடனமாடி அவரை மேலும் உற்சாகப்படுத்தினார். இதனால், மைதானத்தில் விசில் சத்தம் காதை அடைத்தது. இருவரும் சேர்ந்து 250 ரன்களுக்கு மேலாக ரன்களை குவித்தனர்.
தொடர்ந்து, அதிரடி காட்டிய இஷான் கிஷான் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இது அவருடைய அதிகபட்ச ஸ்கோராகும். மறுமுனையில் நிதானமாக ஆடிய கோலி (113), சதத்தை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து, வந்த வீரர்கள் சீரான இடைவேளையில் விக்கெட்டுக்களை இழந்தனர். இறுதியில் 50 ஓவர்களுக்கு 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்களை சேர்த்தது.
இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6வது முறையாக 400 ரன்களுக்கு மேலாக இந்திய அணி ரன்களை குவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், 8 ஆண்டுகளுக்கு பிறகு 400 ரன்களை விளாசியுள்ளது. இதற்கு முன்னதாக, 2011ல் (வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக) 418 ரன்களும், 2009ல் ( இலங்கைக்கு எதிராக) 414 ரன்களும், 2007ல் (பெர்முடாவுக்கு எதிராக) 413 ரன்களும், 2014ல் (இலங்கைக்கு எதிராக) 404 ரன்களும், 2010ல் (தென்னாப்ரிக்காவுக்கு எதிராக) 403 ரன்களும் எடுத்துள்ளது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.