பவுலிங்கில் அசத்தும் பெங்களூரு.. சென்னை அணி ப்ளே ஆப் செல்ல ரெண்டு வாய்ப்பு தான் இருக்கு!

Author: Udayachandran RadhaKrishnan
18 May 2024, 10:37 pm

பவுலிங்கில் அசத்தும் பெங்களூரு.. சென்னை அணி ப்ளே ஆப் செல்ல ரெண்டு வாய்ப்பு தான் இருக்கு!

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. கோலி – டு பிளிசிஸ் சிறப்பான துவக்கம் தந்தனர். அதிரடியாக விளையாடிய கோலி 47 ரங்களில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மறுமுனையில் நிதானமாக ஆட்டத்தை துவங்கி பின்னர் அதிரடியாக விளையாடிய டு பிளிசிஸ் 54 ரன்கள் அடித்து ரன் அவுட்டானார்.

பின்னர் இணைந்த படிதார் – க்ரீன் ஜோடி சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சித்தடித்தனர். அதிரடியாக விளையாடிய படிதார் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 14 ரென்னும் மேக்ஸ்வெல் 16 ரென்னும் அடித்து ஆட்டமிழந்தனர். கிறீன் 38 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது.

சென்னை தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளும், துஷார் தேஷ்பாண்டே, சாட்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார். சென்னை அணிக்கு 219 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி.

இப்போட்டியில் 201 ரன்கள் அடித்தால் பிளே ஆப் சுற்றுக்கு சென்னை அணி தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டாலும் கூட சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வரும் சென்னை அணி 6 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. கெய்க்வாட் டக் அவுட் தொடர்ந்து மிட்செல் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினார். தற்போது ரகானே மற்றும் ரச்சின் ரவிந்திரா விளையாடி வருகின்றனர்.

  • Monalisa Bose viral at Kumbh Mela மகா கும்பமேளாவில் வைரலான இளம் பெண்…அழகில் மயங்கிய பிரபல இயக்குனர்…தட்டி தூக்கிய பாலிவுட்..!