அந்த ஒரு வீரர் யார்..? நாளை ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட்… இந்திய அணியின் ஆடும் லெவனை கணித்த முன்னாள் வீரர்கள் !!!

Author: Babu Lakshmanan
8 February 2023, 5:01 pm

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறும் வீரர்களின் தங்கள் விருப்ப அணியை முன்னாள் வீரர்கள் வெளியிட்டுள்ளனர்.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நாளை தொடங்குகிறது. தொடரை வென்றே ஆக வேண்டும் முனைப்பில் இரு அணியின் வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

india vs australia - updatenews360

ஜுன் 7ம் தேதி ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப் போட்டி நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. தற்போது வரை சாம்பியன்ஷிப் தரவரிசையில் 136 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்திலும், 99 புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்திலும் உள்ளது.

எனவே, இந்தத் தொடரை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்று இரு அணிகளும் முயற்சிக்கும்.

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியின் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, கேஎஸ் பரத், இஷான் கிஷான், சுப்மன் கில், புஜாரா, ஸ்ரேயாஷ் ஐயர், குல்தீப் யாதவ், ரவிச்சந்திர அஸ்வின், அக்ஷர் படேல், ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், சூர்யகுமார் யாதவ், ஜெயதேவ் உனத்கட், முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணியின் ஆடும் லெவனில் யாரெல்லாம் இடம்பிடிக்கப்போகிறார்கள் என்ற குழப்பமும், சந்தேகமும் ரசிகர்களிடையே எழுந்து வருகிறது.

கேப்டன் ரோகித் சர்மா தொடக்க வீரராக விளையாடுவதில் உறுதியாகியுள்ளது. அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடப் போவது கேஎல் ராகுலா..? அல்லது கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வரும் சுப்மன் கில்லா..? என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல, டாப் ஆர்டரில் சூர்யகுமார் யாதவா..? ஸ்ரேயாஷ் ஐயரா..? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஸ்பின்னர்களும், வேகப்பந்து வீச்சாளர்களில் யார் இடம்பெறுவார்கள் என் கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

dinesh karthik - updatenews360

இப்படியிருக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக், தனது விருப்ப அணியை அறிவித்துள்ளார்.

அதில், கேஎல் ராகுல், ரோகித் ஷர்மா, புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, கேஎஸ் பரத், அஸ்வின், அக்ஷர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

harbajan singh - updatenews360

இவரைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கும் தனது விருப்ப அணியை வெளியிட்டுள்ளார். அதாவது, தினேஷ் கார்த்திக் அறிவித்த அணியில் 10 பேர் இடம்பெற்றுள்ளனர். தொடக்க வீரராக கேஎல் ராகுலுக்கு பதிலாக கில்லை சேர்த்துள்ளார்.

எனவே, நாளை நடைபெறும் போட்டியில் யார் யாருக்கு இடம் இருக்கும் என்பது டாஸ் போடும் போதே தெரிய வரும்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 480

    0

    0