ரூ.15 கோடிக்கு ஏலம் எடுத்தது வீண் போகல : ரன் மழை பொழிந்த மும்பை வீரர் இஷான் கிஷன்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 March 2022, 5:44 pm

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தனர்.

ஐபிஎல் தொடரின் 15வது சீசனின் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.

மும்பை அணியின் தொடக்க வீரராக ரோகித் சர்மா, இஷன் கிஷன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா குல்தீப் யாதவ் வீசிய பந்தில் ரோவ்மேன் பவலிடம் கேட்ச் கொடுத்து 41 ஒரு ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய அன்மோல்பிரீத் சிங் 8, கீரன் பொல்லார்ட் 3 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து இறங்கிய திலக் வர்மா 15 பந்தில் 3 பவுண்டரிகள் என மொத்தம் 22 ரன்கள் விளாசி வெளியேறினார். ஆட்டம் தொடங்கத்திலே இருந்து சிறப்பாக விளையாடிய இஷன் கிஷன் அரைசதம் விளாசி 81* ரன்கள் குவித்தார்.

அதில், 11 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசினர். இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தனர்.

Image

டெல்லி அணியில் குல்தீப் யாதவ் 3, கலீல் அகமது 2 விக்கெட்டும் எடுத்தனர்.

தற்போது 2 ஓவர் முடிவில் டெல்லி அணி 21 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. டிம் சிபர்ட்ட அதிரடி ஆட்டத்தை ஆடி வருகிறார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்