பெங்கரூளு பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த பட்லர் : ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை… இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ராஜஸ்தான் அணி !!
Author: Udayachandran RadhaKrishnan27 May 2022, 11:14 pm
15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 2-வது தகுதிச்சுற்று போட்டி அகமதாபாத்தில் தொடங்கியது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ், டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து எளிதான இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி வீரர்கள் ஜெய்ஸ்வால் 21 ரன்களில் ஆட்டமிழக்க, பட்லருடன் கேப்டன் சாம்சன் ஜோடி சேர்ந்தார்.
சாம்சன் ஆவுட் ஆனாலும், பட்லர் அதிரடி காட்டினார். பெங்களூரு பந்து வீச்சாளர்களை திணற வைத்த பட்லர், 59 பந்துகளில் 4வது முறையாக சதமடித்து விளாசினார்.
இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் அடித்து ராஜஸ்தான் அணி, ஐபிஎல் வரலாற்றில் 2வது முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்தது. வரும் 29ம் தேதி குஜராத் அணியுடன் ராஜஸ்தான் அணி மோதுகிறது.
0
0