இந்த முறை பும்ரா… 176 ரன்னுக்கு சுருண்டது தென்னாப்ரிக்கா அணி… இந்தியாவுக்கு ஈஸியான வெற்றி இலக்கு…!!

Author: Babu Lakshmanan
4 January 2024, 4:21 pm

2வது டெஸ்ட் கிரிக்கெட் இந்திய அணிக்கு 79 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது தென்னாப்ரிக்கா

இந்தியா – தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணிக்கு இந்திய பவுலர்கள் சிம்ம சொற்பமனமாக திகழ்ந்தனர். சிராஜ், பும்ரா ஆகியோர் வீசிய ஓவர்களில் எல்லாம் விக்கெட்டை வீழ்த்தினர். இதனால், தென்னாப்ரிக்கா அணி தாக்குபிடிக்காமல் முடியாமல் திணறியது.

அந்த அணியின் மார்க்ரம் (2), எல்கர் (4), ஜோர்ஷி (2), ஸ்டப்ஸ் (3), பெட்டிங்காம் (12), வெரேயின் (15), யான்சென் (0), மகாராஜ் (3), ரபாடா (5), பர்கர் (4) என அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். பெட்டிங்காம் , வெரேயின் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கில் பெவிலியன் திரும்பினர்.

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சிராஜ் 6 விக்கெட்டும், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து, பேட் செய்த இந்திய அணி 153 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கோலி (46), ரோகித் (39), கில் (36), ராகுல் (8) ஆகியோரை தவிர, மற்ற வீரர்கள் ரன் எதுவுமின்றி ஆட்டமிழந்தனர். இதன்மூலம் 95 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றது.

பிறகு, மீண்டும் 2வது இன்னிங்சை விளையாடிய தென்னாப்ரிக்கா பேட்டர்கள் வரிசையாக விக்கெட்டுக்களை இழந்தனர். இதன்மூலம், முதல் நாளில் மட்டும் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 23 விக்கெட்டுக்களை இழந்தனர்.

இதைத் தொடர்ந்து, 2வது நாளிலும் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியது. எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர் மார்க்கரம் மட்டும் சதம் (106) அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில், 176 ரன்னுக்கு தென்னாப்ரிக்கா அணி ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டும், முகேஷ் குமார் 2 விக்கெட்டும், சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

தென்னாப்ரிக்காவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை கைப்பற்றிய இந்திய பவுலர்களில் 3வது இடத்தை பும்ரா (38) பிடித்து உள்ளார். முதல் இரண்டு இடங்களில் அனில் கும்ப்ளேவும் (45), ஜவஹல் ஸ்ரீநாத்தும் (43) உள்ளனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?
  • Close menu