எல்லாமே 18… பெங்களூரூவுக்கு ராசியா…? சென்னையின் பிளே ஆஃப் கணக்கு இதோ..!!!

Author: Babu Lakshmanan
13 May 2024, 8:57 pm

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கொல்கத்தா அணி முதல் அணியாக பிளே ஆஃப்பிற்குள் நுழைந்து விட்டது. நடப்பு சீசனில் 13 போட்டிகளில் விளையாடி, 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தோற்கடித்ததன் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.

16 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி, புள்ளிகள் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றியைப் பொறுத்து, அந்த அணி டாப் இரண்டு இடங்களுக்குள் இருக்க உதவும்.

மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்ததாக தனது கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியுடன் வரும் 18ம் தேதி விளையாடுகிறது. பெங்களூருவில் நடைபெறும் இந்தப் போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் பெற்று நேரடியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே தோல்வியை தழுவினால் ஆர்சிபி வெற்றி இலக்கை 18.1 ஓவர்களுக்கு முன்னதாக சேஸ் செய்யக் கூடாது அல்லது 18 ரன்கள் வித்தியாசத்துக்கு மேல் வெற்றி பெறக் கூடாது.

ஐதராபாத், பெங்களூரு, லக்னோ போன்ற அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. இதில் லக்னோ எஞ்சியுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெறுவது அவசியம். இதற்கு ஆர்சிபி, சென்னையை வீழ்த்த வேண்டும், ஐதராபாத் எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவ வேண்டும்.

ஹைதராபாத் அணியின் அந்த தோல்வி பெங்களூரு மற்றும் சென்னை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறவும் உதவும். (இதற்கு பெங்களூரு, சென்னையை வீழ்த்த வேண்டும்).அதேவேளையில், ஹைதராபாத் அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 18 புள்ளிகளை பெற்று புள்ளிகள் பட்டியலில் முன்னேறி செல்லவும் வாய்ப்பு இருக்கிறது.

  • Enai Noki Paayum Thota controversy தனுஷ் இயக்கிய முதல் படம் பா.பாண்டி இல்லையா…உண்மையை உடைத்து பேசிய கெளதம் வாசுதேவ் மேனன்..!