சொதப்பல் ஆட்டத்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த சென்னை : தொடர் தோல்வியில் இருந்து மீண்ட பெங்களூரு 4வது இடம் பிடித்து அசத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2022, 11:09 pm

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்ய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி – டூ பிளேஸிஸ் களமிறங்கினார்கள். இவர்களின் தொடக்கம் அதிரடியாக இருந்தது.

இதில் 38 ரன்கள் அடித்து டூ பிளேஸிஸ் தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் 3 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழந்தார். 30 ரன்கள் எடுத்து விராட் கோலி தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய பட்டிதார், சிறப்பாக ஆடி 21 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 18-ம் ஓவரை வீசிய தீக்ஷனா, லொம்ரோர், ஹசரங்கா, ஷாபாஸ் அஹமது ஆகிய மூவரின் விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இறுதியாக பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது.

174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது சென்னை அணி களமிறங்கியது. ருத்ராஜ் மற்றும் கான்வே இணை சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.

ஆனால் ஒரு கட்டத்தில் கெய்க்வாட் அவுட் ஆக, அடுத்தடுத்து வந்த சென்னை வீரர்கள் சொதப்பினர். ராயுடு 10 ரன்னில் வெளியேற, மொய்ன் அலி தன் பங்குக்கு 34 ரன் எடுத்து அவுட் ஆனார், ஆனால் உத்தப்பா, ஜடேஜா போன்றோர் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

கேப்டன் தோனியும் 2 ரன்னில் அவுட் ஆக, சென்னை அணியின் வெற்றி தகர்தெறியப்பட்டது. இறுதியில் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து சென்னை தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்த வருட ஐபிஎல் போட்டியில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் தகுதியை இழந்தது சென்னை அணி,.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி