சிஎஸ்கே விக்கெட் கீப்பர் மாற்றமா? விருப்பம் தெரிவித்த பிரபல வீரர்!
Author: Hariharasudhan5 November 2024, 3:20 pm
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2025 ஐபிஎல் தொடர் முதலே விக்கெட் கீப்பரில் இருந்து தோனியை மாற்ற உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: 18வது ஐபிஎல் சீசன், 2025ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் துவங்கப்பட உள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைக்க முடியும் என்ற நிலையில், 10 அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டன. இதன்படி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்க வைக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் 2025 ஐபிஎல் போட்டிகளின் 18வது சீசனில் எம் எஸ் தோனி விளையாடுவது அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல், ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி), மதீஷா பதிரானா (ரூ.13 கோடி), ஷிவம் துபே (ரூ.12 கோடி) மற்றும் ரவீந்திர ஜடேஜா (ரூ.18 கோடி) ஆகியோரும் சென்னை அணியால் தக்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் தோனி 4 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டு உள்ளார்.
அதேநேரம், ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து வந்த நிலையிலும், கே.எல்.ராகுல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு, கடந்த முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ஸ்ரேயஸ் ஐயர் ஆகிய மூவரும் அந்தந்த அணி நிர்வாகத்தால் தக்க வைக்கப்படவில்லை. இது ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்நிலையில், ரிஷப் பன்ட்டை அதிக தொகை கொடுத்தாவது விலைக்கு வாங்க சென்னை அணி நிர்வாகம் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. காரணம், இந்திய கிரிக்கெட் அணியில் எம் எஸ் தோனி ஓய்வு பெற்ற பிறகு அவரது இடத்தை ரிஷப் பன்ட் சிறப்பாக நிவர்த்தி செய்தார். அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் தோனிக்கு மாற்றாக ரிஷப் பன்ட் இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதையும் படிங்க: நெஞ்சே பதறுது.. பிறந்த சிசுவை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து தூக்கி வீசிய கொடூரம்!
மேலும், டிவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், ஷர்தூல் தாகூர், தீபக் சாஹர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய பெரும் வீரர்களை மஞ்சள் படையில் சிஎஸ்கே நிர்வாகம் கடும் முயற்சிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம், கடந்த முறை தோல்வியடைந்து திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் இம்முறை கப் அடித்து, தோனிக்கு ஃபேர்வல் விழா நடத்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும், “என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முழுவதுமே தோனியின் ரசிகனாகவே இருந்துள்ளேன். என்னுடைய விளையாட்டின் கடைசி காலகட்டத்தில் கூட சென்னை சூப்பர் கிங்ஸ்அணிக்காக விளையாட விரும்பினேன். அது மட்டுமல்லாமல், தோனியின் அருகில் இருக்கும் அந்த சூழல் எவ்வாறு இருக்கிறது? அவருடைய கிரிக்கெட் மூளை எவ்வாறு செயல்படுகிறது?” என்பதைப் பார்க்க வேண்டுமென தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின் கூறியது, அவரது ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டு வருகிறது.