இனி இவங்க ஆட்டம் வேறமாறி.. மீண்டும் அதிரடி காட்டத் தயாராகும் சென்னை அணி : ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
Author: Udayachandran RadhaKrishnan2 April 2022, 10:12 pm
ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக தீபக் சாஹர் வெளியேறிய நிலையில், தற்பொழுது அவர் மீண்டும் அணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு போட்டிகளில் விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம், சென்னை அணியின் பந்துவீச்சில் தான். அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் இல்லாததால் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்திக்க காரணமாய் அமைந்தது.
சென்னை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர்களான தீபக் சஹார், ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டன் காயம் காரணமாக போட்டிகளில் கலந்துகொள்ள முடியவில்லை. தற்பொழுது தீபக் சஹார், வலைப்பயிற்சியில் ஈடுபடும் நிலையில், அவர் அணிக்கு மீண்டும் திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது.
காயங்களில் இருந்து தீபக் சாஹர் மீண்டுள்ள நிலையில், அவர் பெங்களூர், NCA மைதானத்தில் வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தீபக் சாஹர், விரைவில் பூரணமாக குணமடைந்து சென்னை அணிக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது, மேலும், வரும் 25-ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதால், இது சென்னை அணிக்கு பெரிய பலமாய் அமையும்.