மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 33வது ஆட்டம் இன்று மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா 51 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
சூர்யகுமார் யாதவ் 32 ரன், ஹிருத்திக் ஷாகீன் 25 ரன்னில் ஆட்டமிழந்தனர். சென்னை அணி சார்பில் முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. முதல் பந்தில் ருத்ராஜ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய சாண்ட்னர் 11 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய உத்தப்பா 30 ரன்னிலும், ஷிவம் டுபே 13 ரன்னிலும் வெளியேறினர். பொறுப்புடன் ஆடிய அம்பதி ராயுடு 40 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி 5 ஓவரில் 53 ரன்கள் தேவைப்பட்டது. ஜடேஜா 3 ரன்னில் அவுட்டானார். டோனியுடன், பிரெடோரியஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் கடைசி வரை போராடினர். பிரெடோரியஸ் 22 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், சென்னை அணி 156 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. டோனி 13 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி சார்பில் டேனியல் சாம்ஸ் 4 விக்கெட்டு, உனத்கட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
This website uses cookies.