கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மோதல் : நெரிசலில் மிதிப்பட்டும், மூச்சுத் திணறி 127 பேர் பரிதாப பலி… பதற்றத்தால் போலீஸ் குவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 October 2022, 11:25 am

இந்தோனேஷியா கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட வன்முறையில் பலர் நெரிசலில் சிக்கியும், போலீசார் கண்ணீர் புகை வீச்சில் பலர் மூச்சுத்திணறி 127 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு லோக்கல் சேனல் ஒன்று தெரிவிக்கிறது.

கிழக்கு ஜாவா பகுதியில் இரு அணியினர் நடந்த கால்பந்து போட்டி நிறைவு பெற்றதும் வெற்றி, தோல்வி அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தோல்வியுற்ற அணியின் ஆதரவாளர்கள் மைதானத்திற்குள் ஓடினர்.

இதனால் பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகை வீசினர். இதில் பலரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். பலர் நெரிசலில் மிதிபட்டு இறந்தனர். பலர் கண்ணீர் புகைவீச்சில் மூச்சு திணறினர். இதில் 127 பேர் பலியாகினர்.

காயமுற்ற 180 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் . மேலும் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த துயர சம்பவத்தால் இந்நாட்டில் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ